விமானம் விழுந்து நொறுங்கி கோர விபத்து; 62 பேர் பலி - வெளியான பகீர் காட்சிகள்!
விமானம் விழுந்து நொறுங்கியதில் 58 பயணிகள் உட்பட 62 பேர் உயிரிழந்தனர்.
விமான விபத்து
பிரேசிலில் வோபாஸ் என்ற விமானம், காஸ்காவெல் நகரில் இருந்து சாவோ பாவுலூ நகரில் உள்ள கவுருல்ஹோஸ் விமாநிலையத்திற்கு புறப்பட்டது. இதில், 58 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் பயணித்தனர்.
அப்போது, வின்ஹெடோ என்ற இடத்தில் வானில் சிறிது நேரம் வட்டமடித்த விமானம், திடீரென்று சுமார் 17 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து ஒரு நிமிடத்திற்குள் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது.
61 பேர் பலி
அதில், விமானம் தீப்பற்றி எரிந்ததில், 58 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதற்கிடையில், விமானம் பறந்து கொண்டிருந்த போதே கட்டுப்பாட்டை இழந்து வானத்தில் சுழன்றபடி கீழே விழும் பரபரப்பு சிசிடி காட்சிகள் வெளியாகியுள்ளன.
BREAKING: Voepass Flight 2283, a large passenger plane, crashes in Vinhedo, Brazil pic.twitter.com/wmpJLVYbB3
— BNO News (@BNONews) August 9, 2024
தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரேசில் அதிபர் சில்வா, விமான விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் சாவோ பாவுலூ மாகாணத்தில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.