விளையாடிக்கொண்டிருக்கும் போதே உயிரிழந்த பிரேசில் கால்பந்து வீரர்!
விளையாடும்போதே 24 வயது பிரேசில் கால்பந்து வீரர், மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் 24 வயதான கால்பந்து வீரர் அலெக்ஸ் அபோலினாரியோ. இவர் ஞாயிற்றுக்கிழமை போர்ச்சுக்கல் அணிக்காக விளையாடிவருகிறார்.
இந்த நிலையில் நேற்று நடந்த விளையாட்டுப் போட்டியில் அலெக்ஸ் 27-ஆம் நிமிடத்தில் திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்தார்.
அவரை உடனே மருத்துவமனையில் சேர்த்தனர், அன்றிரவே அவர் சுயநினைவுக்குத் திரும்புவார் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர்.
ஆனால், இன்று அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை தெரிவித்தது.
அலெக்ஸுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அவரது அணி நிர்வாகம் அனைத்து பணிகளையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
மேலும் அவரது குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.