பிரேசிலில் வரலாறு காணாத பேரிடர்; வெள்ளத்தில் அடித்துச் செல்லும் வாகனங்கள்

Viral Video Brazil
By Nandhini Feb 20, 2023 09:51 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

பிரேசிலில் வரலாறு காணாத கனமழை பெய்து வருவதால், வெள்ளத்தில் பல வாகனங்கள் அடித்துச் செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலை புரட்டிப்போட்ட கனமழை

பிரேசிலின் தென்கிழக்கு கடலோரப் பகுதிகளில் சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நகரம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் தீயணைப்புத் துறை மீட்புக் குழுவினர் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டு வருகின்றனர்.

இதுவரை கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 36 பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் காணாமல் போனவர்களை மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

brazil-causing-floods-and-landslides-viral-video

வெள்ளத்தில் அடித்துச் செல்லும் வாகனங்கள்

பிரேசிலில் கொட்டித் தீர்க்கும் கனமழையில் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.