உக்ரைன் போரில் மகளை பாதுகாக்க போராடும் தந்தை - மனதை உருகவைக்கும் வீடியோ

Ukraine viralvideo NATO worldwar3 StandWithUkraine fatherdaughter
By Petchi Avudaiappan Feb 25, 2022 11:25 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

உக்ரைனில் ரஷ்யா போர் புரிந்து வரும் நிலையில் தந்தை ஒருவர் தனது மகளைக் கட்டிப்பிடித்து அழும் வீடியோ ஒன்று காண்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது. 

உக்ரைன் தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. இதனால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறி ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. தொடர்ந்து 3வது நாளாக நடைபெறும் இந்த வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலால் இருநாட்டு பாதுகாப்பு வீரர்களும், அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். 

இதற்கிடையில் உக்ரைனில் போர் நடைபெற்று வருவதால் தனது மகளை பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பிய வைத்து தந்தை அழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.