தீவிர கண்காணிப்பில் இருக்கிறார் - நடிகர் அஜித்திற்கு மூளையில் அறுவை சிகிச்சை..?
நடிகர் அஜித் நேற்றைய தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நடிகர் அஜித்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். தற்போது மகிழ் திருமேனியின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
இதில், திரிஷா, ஆரவ், ரெஜினா, ஆக்ஷன் கிங் அர்ஜுன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். அண்மையில், அஜித் தனது மகன் ஆத்விக்கின் 9-வது பிறந்தநாளை சென்னையில் குடும்பத்தினருடன் கொண்டாடினார்.
அறுவை சிகிச்சை
இந்நிலையில் சென்னை, அப்பலோ மருத்துவமனையில் அஜித் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது முதலில் வழக்கமான பரிசோதனை தான் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது திடுக்கிடும் தகவல் ஒன்று வெளிவந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
உண்மையில் அஜித் மூளையில் கட்டி இருந்ததாகவும், அதை அறுவை சிகிச்சை செய்து எடுத்ததாக கூறப்படுகிறது.ந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் கடும் சோகம் மற்றும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
மேலும், அந்த கட்டி மூளையின் வலது புறம் இருந்ததாகவும், அதை அகற்றிய பின் அஜித் தற்போது அப்செர்வேஷனில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதோடு இன்னும் 3 மாதம் அஜித் ஓய்வில் இருப்பார் என்று கூறப்படுகிறது.