மூளையை தின்னும் அமீபா; மூன்று மாத குழந்தை உள்பட 3 பேர் பாதிப்பு - எச்சரிக்கை!

Cold Fever Kerala Death
By Sumathi Aug 20, 2025 04:54 PM GMT
Report

மூளைக் காய்ச்சலால் மூன்று மாத குழந்தை உள்பட 3 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

மூளைக் காய்ச்சல்

கேரளாவில் அமீபா மூளைக்காய்ச்சலால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூளையை தின்னும் அமீபாவால், இந்த அரிய வகை நோய் பரவி வருகிறது.

மூளையை தின்னும் அமீபா; மூன்று மாத குழந்தை உள்பட 3 பேர் பாதிப்பு - எச்சரிக்கை! | Brain Eating Amoeba In Kerala 3 Affected

அந்த வகையில் கோழிக்கோடு, தாமரச்சேரி பகுதியை சோ்ந்த 9 வயது சிறுமிக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது. அதற்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. பின், ஆய்வகத்தில் பரிசோதனை செய்ததில் சிறுமிக்கு அமீபா மூளைக்காய்ச்சல் பாதித்து இருப்பது உறுதியானது.

தொடர்ந்து சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன்பின், சிறுமியின் 7 வயது சகோதரன் உடல் வலி, வாந்தி, கடும் தலைவலி உள்ளிட்ட அமீபா மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராணுவ வீரரை கம்பத்தில் கட்டி வைத்து கொடூரத் தாக்குதல் - அதிர்ச்சி வீடியோ

ராணுவ வீரரை கம்பத்தில் கட்டி வைத்து கொடூரத் தாக்குதல் - அதிர்ச்சி வீடியோ

3 பேர் பாதிப்பு

மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள 2 பேருக்கு அமீபா மூளைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓமசேரி பகுதியை சேர்ந்த 3 மாத குழந்தை, அண்ணசேரி பகுதியை சேர்ந்த 40 வயது நபர் நோயால் பாதித்துள்ளனர்.

brain eating amoeba

கடந்த 2 வாரத்தில் மட்டும் 3 பேருக்கு அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மேலும் சிலருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.