இறந்து உயிர் வாழும் நபர் - மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்...!
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞர் திவாகரின் உடல் உறுப்புகளை தானம் செய்த குடும்பத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டம், மோட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கமலநாதன். இவரின் மூத்த மகன் திவாகர் (27). இவர் கடந்த 23-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.
மூளை உயிரிழப்பு
இந்த விபத்தில் திவாகர் பலத்த காயம் அடைந்தார். இதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் கடந்த திங்கட்கிழமை திவாகர் மூளை உயிரிழப்பு அடைந்தார்.
உடல் உறுப்புகளை தானம்
இது குறித்து மருத்துவர்கள் திவாகர் குடும்பத்தார் தெரிவித்தனர். இந்த இக்கட்டான தருணத்திலும், அவரது குடும்பத்தார் திவாகரின் உடல் உறுப்புகளை தானம் செய்வது என்று முடிவெடுத்தனர். இதனையடுத்து, உறுப்பு தானத்துக்கு தேவையான ஏற்பாடுகளை மருத்துவமனை நிர்வாகத்தினர் மேற்கொண்டனர்.
இதயம் மற்றும் நுரையீரல்களை எடுத்துச் செல்ல சென்னையிலிருந்து ஒரு மருத்துவ குழுவும், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலை எடுத்துச் செல்ல கோயம்புத்தூரிலிருந்து ஒரு மருத்துவ குழுவினரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.