மூளைச்சாவு அடைந்த ரயில்வே ஊழியர் - இறந்த 7 உயிர்களை காப்பாற்றியதால்…தாய் உருக்கம்

Chennai
By Thahir Oct 22, 2022 07:44 AM GMT
Report

ஓசூரில் மூளைச்சாவு அடைந்த ரயில்வே ஊழியரின் உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டது.

மூளைச்சாவு அடைந்த ரயில்வே ஊழியர் 

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்ப்பேட்டையில் ரயில்வே ஊழியராக பணியாற்றிய பிரபாகர்(31), கடந்த 20ம்தேதி இரவு கீழே விழுந்து தலையில் பலத்த காயத்துடன் அன்றிரவு 10 மணியளவில் ஓசூர் காவேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Brain dead railway employee

சிகிச்சை பலனிக்காததால் மூளை சாவு அடைந்த பிரபாகரனின் உடல் உறுப்புக்களை தானமாக வழங்க மனைவி, தாய் உறவினர்கள் சம்மதம் தெரிவத்தநிலையில் உடலில் இருந்து அகற்றப்பட்ட இதயம் 4 மணி நேரத்துக்குள் மற்றொருவருக்கு பொறுத்த வேண்டும் என்பதால் 3.30 மணிநேரத்திற்குள் இதயத்தை சென்னை கொண்டு செல்லும் சவாலான பணியினை ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த செந்தில், வேலூரை சேர்ந்த கணேஷ் ஆகியோர் செய்ய உள்ளனர் காலை 11.30மணிக்கு கிளம்பிய ஆம்புலன்ஸ் வாகனம் 3 மணிக்கு இலக்கை அடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தானமாக பெறப்பட்ட இரயில்வே ஊழியரின் இதயம் ஒசூரில் இருந்து சென்னை அமைந்தகரையில் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனை வரை சுமார் 302 கிலோ மீட்டர் பயணிக்க உள்ளது.

உடல் உறுப்புகள் தானம் 

உடலில் இருந்து அகற்றப்பட்ட இதயம் 4 மணி நேரத்துக்குள் மற்றொருவருக்கு பொறுத்த வேண்டும் என்பதால் 3.30 மணிநேரத்திற்குள் இதயத்தை சென்னை கொண்டு செல்லும் சவாலான பணியினை ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் செய்ய உள்ளனர்.

பண்டிகை என்பதால் தாமதம் ஏற்படாமல் இருக்க ஒசூரிலிருந்து சென்னை வரை சாலையை காவல் துறையினர் சீரமைத்து தர உள்ளனர். பூந்தமல்லியில் MGM மருத்துவமனை வரை கிரீன் காரிடார் மூலம் போக்குவரத்து சீர் செய்யப்பட உள்ளது.

இதயம், நுரையீரல் சென்னைக்கும், கண் விழிகள் பெங்களூரு, சிறுநீரகங்கள் கோயம்புத்தூர் பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுவதால் 7 நோயாளிகள் இதன் மூலம் பயன்பெற உள்ளனர்.

இதுக்குறித்து பேட்டியளித்த பிரபாகரனின் தாயார் அம்சவேணி; தனது மகன், பிறரின் உடலில் உயிரோடு இருப்பதால் அவர்களின் ஆசீர்வாதம்,பாராட்டு பேரன்,பேத்திகளுக்கு நல்லதாக அமையும் என உருக்கமாக பேசினார்