Wow... அரபிக்கடலிலிருந்து பரிசோதிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி.!

India
By Nandhini Mar 06, 2023 07:50 AM GMT
Report

அரபிக்கடலிலிருந்து பரிசோதிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கி சாதனைப்படைத்துள்ளது.

பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

இந்திய கடற்படை தனது கப்பலிலிருந்து பிரம்மோஸ் ஏவுகணையை அரபிக்கடலில் வெற்றிகரமாக சோதனை செய்தது. இதன் பூஸ்டரை #DRDO வடிவமைத்தது. இந்த ஏவுகணை அரபிக்கடலில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கியது.

அதே நேரத்தில் கொல்கத்தா போர்க்கப்பலிலிருந்து இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. இந்த தகவலை இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

தற்போது இது குறித்த வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்ததற்காக DRDO வின் அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் குழுவிற்கு நெட்டிசன்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

brahmos-indiannavy-brahmos-missile-viral-video