ரோகித் சர்மாவிற்கு இனிமே தான் பிரச்சனையே இருக்கு - எச்சரிக்கை விடுத்த முன்னாள் வீரர்
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவிற்கு இனிமேல் தான் உண்மையான பிரச்சனைகள் இருக்கும் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
கடந்த 7 வருடங்களாக இந்தியாவை நம்பர்-1 அணியாக மிக சிறப்பாக வழிநடத்தி வந்த விராட் கோலி கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டிக்குப் பின் அனைத்து விதமான போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.
இதனைத் தொடர்ந்து கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ்,இலங்கை அணிக்கு எதிரான தொடர்களை இந்திய அணி வென்றது. இதனால் ரோகித் சர்மாவை முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.
விராட் கோலியைவிட ரோகித் சர்மா மிக சிறந்த கேப்டனாக உள்ளாதாக கூறப்பட்டு வரும் நிலையில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான பிராட் ஹாக் எச்சரிக்கை விடுத்துள்ளார். அப்போது ஒரு கேப்டனாக ரோகித் சர்மா சவாலான தொடர்களை இனி தான் எதிர்கொள்ள உ ள்ளார் என்றும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் சவாலாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இத்தகைய போட்டிகளில் ரோகித் சர்மா கூலாக இருக்கிறாரா அல்லது ஆக்ரோஷமாக மாறுகிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்திய அணி அடுத்தடுத்து தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற பலமான அணிகளுடன் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.