ரோஹித் சர்மா எல்லாம் இவர்கள் முன்னால் வேஸ்ட் : முன்னாள் வீரர் சொன்ன அதிர்ச்சி தகவல்
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவால் சிறப்பாக செயல்பட முடியாது என முன்னாள் வீரரான பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இதில் முதல் போட்டி ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் குறித்தான தங்களது எதிர்பார்ப்பையும், கணிப்புகளையும் கிரிக்கெட் பிரபலங்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் ஆஸி. அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தனது கணிப்பை கூறியுள்ளார். அதில் ரோஹித் சர்மாவால் இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட முடியாது என்றும், இங்கிலாந்து மண்ணில் அவரது சராசரி வெறும் 24 தான் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரின் பந்துவீச்சை ரோஹித் சர்மா எதிர்கொள்ள திணறுவார். ரோஹித் சர்மா ஒருவேளை சிறப்பாக விளையாடிவிட்டால் அது எனக்கு பெரிய ஆச்சரியத்தை கொடுக்கும் என்று பிராட் ஹாக் கூறியுள்ளார்.