தவான் வேண்டாம்... விராட் கோலி போதும் : பிரபல வீரர் வெளியிட்ட தகவல்
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் எதிர்வரும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் தனது ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார்.
16 அணிகள் பங்குபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் – நவம்பர் மாதத்தில் துபாய் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் டி20 உலக கோப்பை குறித்த தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிராட் ஹாக், இந்திய அணிக்கான தனது ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார். இதில் ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல் ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், புவனேஷ்வர் குமார், சாஹல்/குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரிட் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
டி20 இல் சிறப்பாக விளையாடும் ஷிகர் தவானுக்கு பிராட் ஹாக் இடம் கொடுக்கவில்லை. அதற்கு பதிலாக விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக சிறப்பாக விளையாடுவார் என அவர் கணித்துள்ளார்.