இரத்த சோகை,சர்க்கரை நோய்,பிபி இருக்கா - கவலை வேண்டாம் இதோ இருக்கு இயற்கை மருந்து!
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல்,இரத்த சுத்திகரிப்பு பண்புகள்,ஹீமோகுளோபினை மேம்படுத்துதல்,செரிமான பிரச்சனைகளை எளிதாக்குதல் போன்ற பல நன்மைகளை உள்ளடக்கியது நாவல் பழம்.
நாவல் பழம் இரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது.இது இன்சுலின் எதிர்ப்பிற்கு எதிரானதாக செயல்படுகிறது.
நாவல் பழம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.இந்த பழத்தில் நார்ச்சத்து,கால்சியம்,இரும்பு,பாஸ்பரஸ்,பொட்டாசியம்,வைட்டமின் சி மற்றும் பி6 ஆகியவை அடங்கியுள்ளது.
இந்த பழத்தில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தோல் மற்றும் இரத்தத்தில் உள்ள நச்சுகளை எதிர்த்துப் போராடுகிறது. வாய் முதல் குடல் வரை உள்ள புண்களை குணப்படுத்தும்.மேலும் பசியைத் துாண்டுகிறது.
இரத்த சர்க்கரையின் அளவை குறைக்கும்:
நாவல் பழம் ஆன்டிபயாடிக் பண்புகள் நிறைந்த பழம் இதனை தினமும் உண்டு வரும் போது உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும் மேலும் உங்களுக்கு சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது.
இதய ஆரோக்கியத்திற்கு நல்லது
பொட்டாசியம் நிறைந்துள்ளதால்,தமனிகளை கவனிப்பதன் மூலம் உயர் ரத்த அழுத்தம், ஹார்ட் அட்டாக்,பக்கவாதம் வராமல் தடுக்கிறது.
தொற்று நோய்களை தடுக்கிறது
மாலிக் அமிலம், டானின்கள், காலிக் அமிலம், ஆக்ஸாலிக் அமிலம் மற்றும் போட்லினம் அமிலம் ஆகியவை நாவல் பழத்தில் உள்ளது.இது தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.