சண்டைகாட்சிகள் மூலம் இணையத்தை கலக்கிய சிறுவர்கள் யார் தெரியுமா?
தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யானின் வக்கீல் சாப் படத்தில் இடம்பெற்ற சண்டைக்காட்சியை அப்படியே செய்து சிறுவர்கள் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்த சிறுவர்கள் தான் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகின்றனர்.
எந்த சினிமா பின்னணியும் இல்லாமல், நடுத்தர வாழ்வை நடத்தும் எளிய குடும்பத்தை சேர்ந்த சிறுவர்களின் இயக்கத்தில் உருவான இந்தவீடியோ. தற்போது சினிமா காரர்களையே சிலிர்க்க வைத்துள்ளது.
[
மீன் வியாபரத்தில் ஈடுபடும் இந்த சிறுவர்கள், இந்த லாக்டவுன் காலத்தில் ஏதாவது ஒரு வகையில் குடும்பத்திற்கு உதவிவருகின்றனர்.
இடையே கிடைக்கும் ஓய்வு நேரத்தில் இந்த வீடியோவை பதிவு செய்து உள்ளனர்.
பெரிய தொழில்நுட்பங்கள் எதுவுமின்றி, தாங்களாகவே படத்தில் இடம்பெற்ற சண்டை காட்சியினை மறு உருவாக்கம் செய்திருப்பது இணையவாசிகளை பாராட்ட வைத்துள்ளது.