பைத்தான் பாம்பை வைத்து ஸ்கிப்பிங் விளையாடிய சிறுவர்கள் - வீடியோவால் அதிர்ச்சி!
பாம்பு ஒன்றை பயன்படுத்தி சிறுவர்கள் சிலர் ஸ்கிப்பிங் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.
சிறுவர்கள் செயல்
ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து மாகாணத்தில் ஊரபிண்டா என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு சிறுவர்கள் சிலர் ஸ்கிப்பிங் விளையாடிய வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்னவென்றால், அதில் ஒரு மீட்டருக்கும் கூடுதலான நீளம் கொண்ட பாம்பு ஒன்றை ஸ்கிப்பிங் கயிறு போல பயன்படுத்தியுள்ளனர். இருபுறமும் நின்று கொண்டு 2 சிறுவர்கள் கையால் பிடித்து கொண்டு, மற்றொரு சிறுவன் ஸ்கிப்பிங் ஆடுகிறார்.
வீடியோ வைரல்
அப்போது அந்த சிறுவர்களில் ஒருவன் இது கருப்பு தலையுடன் கூடிய பைத்தான் பாம்பு என கூறுகிறான். இவ்வாறான காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
Australian Aboriginal children use dead python as a skipping rope in Woorabinda, Queensland pic.twitter.com/1VfIdL3hIs
— Clown Down Under 🤡 (@clowndownunder) March 10, 2025
இந்நிலையில், சுற்றுச்சூழல், சுற்றுலா, அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கான துறையை சேர்ந்த செய்தி தொடர்பாளர் கூறுகையில்,
இந்த முறையற்ற செயலுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். சம்பவம் பற்றி விசாரணை மேற்கொள்ளப்படும். விலங்குகளை மதிப்புடன் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.