திருமணத்துக்கு இடையூறாக இருந்த காதலியின் தந்தை அடித்துக் கொலை - அதிர்ச்சி சம்பவம்

mumbai loveissue brutallymurder
By Petchi Avudaiappan Mar 17, 2022 10:13 PM GMT
Report

மும்பையில் திருமணத்துக்கு இடையூறாக இருந்த  காதலியின் தந்தையை காதலன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பை உல்லாஸ் பகுதியைச் சேர்ந்தவர் பப்பு குமார் ஷா என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அப்பெண்ணின் தந்தையான கமல்ஜீத் என்பவரை சந்தித்து பேசிய பப்பு குமார் திருமணம் குறித்து பேசியுள்ளார். 

ஆனால் கமல்ஜீத் இதற்கு சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறிய பப்பு சில நாட்களுக்கு பின் அவரை பார்ட்டி ஒன்றிற்கு அழைத்துள்ளார். 

அங்கு சென்ற கமல்ஜீத் குடிபோதையில் மயங்கிய நிலையில் இருந்தபோது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பப்பு குமார் உன்னோட மகளை திருமணம் செய்துகொள்ள தடையா இருக்கும் நீ உயிரோடு இருக்க வேண்டாம் என கூறி கொடூரமாக கொலை செய்துள்ளார். தொடர்ந்து காதலிக்கு போன் செய்து தான் அப்பாவை கொலை செய்துவிட்டேன் என தெரிவித்துள்ளார். 

அதிர்ச்சியடைந்த அப்பெண் உடனடியாக அருகிலிருந்த காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கமல்ஜீத் உடலை கைப்பற்றி பப்பு குமாரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.