5 பெட்ரூம்கள் தயார்; "ஆண் காதலன் தேவை" - விளம்பரம் வெளியிட்ட விவாகரத்தான பெண்!

United States of America World
By Jiyath Aug 08, 2023 07:38 AM GMT
Report

ஆண் காதலன் தேவை

அமெரிக்கா நியூயார்க்கை சேர்ந்த பெண் ஒருவர் கிரெய்க்ஸ்லிஸ்ட் என்ற வேலை, வீடு, தேடுபவர்களுக்கான விளம்பர இணைய தளத்தில் 'ஆண் காதலன் தேவை' என்ற பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

5 பெட்ரூம்கள் தயார்; "ஆண் காதலன் தேவை" - விளம்பரம் வெளியிட்ட விவாகரத்தான பெண்! | Boyfriend Wanted New York Womans Craigslist I

இது அமெரிக்கவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் பக்கமாகும். அந்த பெண் வெளியிட்டுள்ள பதிவில் 'ஹூஸ்டனின் புறநகர்ப் பகுதியான TX, Angleton இல் எனக்கு ஒரு அழகான, 5 படுக்கையறை கொண்ட விசாலமான வீடு ஒன்று உள்ளது.

என்னுடன் வாழ்வதற்கு ஒரு ஆண் காதலன் அல்லது ரூம் மேட் (roommate) வேண்டும். குற்றப் பின்னணி எதுவும் இருக்கக் கூடாது, பூனைகளை நேசிப்பவராக இருக்க வேண்டும், முதல் 60 நாட்கள் இலவசம் என்று குறிப்பிட்டுள்ளார்.

வைரலான பதிவு

மேலும், நான் ஒரு தடகள வீரர் என்பதால் பார்ப்பதற்கு மோசமாக தோன்றவில்லை. என் எடையில் சில ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஆனால் நான் நல்ல நிறமானவள். எனக்கு ஏற்கனவே திருமனாமாகி 13 மற்றும் 15 வயதில் குழந்தைகள் உள்ளனர்.

ஆனால் அவர்கள் இருவரும் அவர்களது தந்தையுடன் உள்ளனர். தற்போது நான் தனிமையில் இருக்கிறேன். விவாகரத்திற்குப் பிறகு யாரையும் சந்திக்க வில்லை. மேலும், எனது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இத்தாலிய, இஸ்ரேலிய அல்லது யூத ரத்தம் உள்ளவர்களிடம் நான் எவ்வளவு ஈர்க்கப்பட்டேன் என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறேன்.

அதனால்தான் நான் கிறிஸ்தவ ஆண் நண்பரோ அல்லது காதலரோ தேவை என நினைக்கிறேன் என அவர் அந்த பதிவில் கூறியுள்ளார். இந்த பதிவு இப்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.