பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசிய காதலன் - நெல்லை அருகே அதிர்ச்சி சம்பவம்
நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த முத்துலட்சுமி. இவர் கணவரை பிரிந்து தாய் வீட்டில் வாழ்ந்து வந்தார்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர் செல்வம். இவர் சேலை வியாபாரி.
முத்துலட்சுமிக்கும், செல்வத்திற்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இதனையடுத்து, இருவரும் தேவகோட்டையில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி சேலை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
சமீபகாலமாக இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த தகராறில் கோபமடைந்த செல்வம் கழிவறை சுத்தம் செய்வதற்காக வைத்திருந்த ஆசிட்டை எடுத்து முத்துலட்சுமி முகத்தின் ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். முத்துலட்சுமியின் அலறல் சத்தம் கேட்ட, அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக முத்துலட்சுமியை மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவான செல்வத்தை தேடிவந்தனர்.
இந்நிலையில், போலீசாரின் தீவிர வேட்டுதலில் ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த செல்வத்தை அதிரடியாக கைது செய்துள்ளனர்.