கடைசி நேரத்தில் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த காதலன்..விபரீத முடிவு எடுத்த காதலி
திருமணத்துக்கு ஒரு வாரம் மட்டுமே இருந்த நிலையில் மணப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெலாசில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் சுஷ்மா. இவர் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர். அதே பகுதியில் பணியாற்றிவந்த பரத் என்பவருடன் சுஷ்மாவுக்கு காதல் மலர்ந்துள்ளது.
இதையடுத்து இவர்கள் இருவரும் வீட்டில் காதலிப்பதாக கூறி பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்யவிருந்தார்கள். இந்நிலையில் தற்போது கல்யாணத்திற்கு ஒருவாரமே உள்ள நிலையில் தனக்கு சுஷ்மாவை பிடிக்கவில்லை அதனால் உடனடியாக திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று பரத் கூறியுள்ளார்.
இதைக்கேட்ட சுஷ்மா அதிர்ச்சியில் மனமுடைந்தார். பரத் தன்னை திருமணம் செய்ய மறுத்துள்ளதால் அந்த வேதனை தாங்க முடியாமல் சுஷ்மா தற்கொலை செய்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து சித்தூரில் உள்ள சுஷ்மாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சுஷ்மா அமெரிக்காவில் தற்கொலை செய்ததால் சட்டபூர்வமாக தான் இந்த வழக்கை நடத்த வேண்டும் என்று போலீசார் அதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.