ஆரோக்கியமான ரவா இட்லி செய்வது எப்படி?

rava idly
By Petchi Avudaiappan Sep 08, 2021 12:19 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உணவு
Report

கோதுமையின் மேல் தோலை நீக்கிய பின் மெல்லியதாக அரைத்து ரவை தயாரிக்கப்படுகிறது. இது ரவா என்றும் அழைக்கப்படுகிறது.

ரவைக்கான அறிவியல் பெயர் ரவை லுகோட்ரிச்சா. ஆங்கிலத்தில் செமலினா (Semolina) என்றும் சுஜி (Suji) என்றும் அழைக்கப்படுகிறது. 

ரவையில் எந்த வகை உணவு செய்தாளும் அது சுவையாகவே இருக்கும். சுவை மட்டும் இல்லாமல் ஆரோக்கியமும் சேர்ந்து கிடைக்கும் ஒரே உணவு ரவை.

ரவையில் செய்த உணவை சாப்பிட்டால் உடல் எடையும் குறையுமாம்.அப்படிபட்ட ரவையில் இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:

கோதுமை ரவை-1 கப்
புளித்த தயிர்-2 கப்
உப்பு -தேவையான அளவு
கேரட்-2-3.

செய்முறை

முதலில் கடாயை அடுப்பில் வைத்து 1 கப் ரவையை நன்றாக நிறம் மாறும் வரை வறுத்து எடுத்து கொள்ளவும்.

பின்பு அதில் தயிர், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொண்டு சுமார் 1 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

ஊறிய பிறகு அதில் நறுக்கிய கேரட் சேர்த்து இட்லி குக்கரில் மாவை ஊற்றி வேக வேண்டும்.

10 நிமிடங்கள் பிறகு எடுத்தால் சூடான, ஆரோக்கியமான இட்லி தயார்.