கள்ளகாதலனால் கொடூரமாக கொல்லப்பட்ட காதலி - பாய் பெஸ்டீஸால் வந்த வினை!
ஆந்திராவில் தனது காதலியை அவரது கள்ளக்காதலன் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்காதல்
ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் இளம் பெண் சிராவணி.
இவருக்கு ஏற்கெனவே திருமணம் நடைபெற்ற நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். பின்னர், இவர்கள் இருவரும் பிரிந்து தனி தனியே வாழ்ந்து வருகின்றனர்.
இவர் அந்த பகுதியில் ஒரு செருப்பு கடையில் பணிபுரிந்து வருகிறார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கோபால் என்ற இளைஞருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
இந்த கோபால் பெயிண்டர் ஆக தொழில் செய்து வருகிறார். தொடர்ந்து, இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
கொலை
இந்நிலையில், இந்த பெண் பல ஆண்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த கோபால் பல முறை இது குறித்து இவரை கண்டித்துள்ளார்.
ஆனாலும் அவர் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பல ஆண்களுடன் பேசிகொண்டிருந்தார்.
அதனால் ஆத்திரமடைந்த கோபால் இவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார், தொடர்ந்து இருவரும் அந்த பகுதியில் உள்ள கடற்கரை பூங்காவிற்கு சென்றுள்ளனர்.
அப்போது இது குறித்து இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், உடனே ஆத்திரத்தில் அவர் அந்த பெண்ணின் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
மேலும், அவர் காவல் நிலையத்தில் போலீசாரிடம் சரணடைந்துள்ளார், தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.