விபத்தில் உயிரிழந்த காதலன்...தற்கொலை செய்து கொண்ட காதலி
சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி காதலன் இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த 19 வயதான அந்த மாணவி ,சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.இவரது சொந்த ஊர் ஆரணி.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தந்து சொந்த ஊருக்கு சென்று வந்துள்ளார். அதன் பிறகு வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து பள்ளிக்கரணை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் மாணவி ரம்யாவின் தற்கொலைக்கான காரணம் தெரியவந்தது.
போலீசார் அளித்த தகவலானது, "தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் செல்போனை ஆய்வு செய்ததில். அவரது சொந்த ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். மேலும் அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில் அந்த வாலிபர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த தகவல் அறிந்த மாணவி அந்த வாலிபரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பின் சென்னை திரும்பியுள்ளார்.
அதன் பிறகு வேதனை தங்கத்தை அந்த மனைவி வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன".
இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.