வன்முறையினை ஆதரிக்கிறதா ஆலியாபட் படம் : ட்விட்டரில் ட்ரெண்டாகும் #BoycottAliaBhatt
நாளை டார்லிங்ஸ் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ்-இல் வெளியாக உள்ள நிலையில், ஆலியா பட்டை புறக்கணிக்கும் விதமாக அவருக்கு எதிராகBoycott ஆலியா பட் ஹாஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளயது.
டார்லிங்ஸ்
ஆலியா பட் தனது அடுத்த திரைப்படமான டார்லிங்ஸ் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளார். நேரடி ஓடிடி வெளியீடாக நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்தில் ஷெபாலி ஷா, விஜய் வர்மா மற்றும் ரோஷன் மேத்யூ ஆகியோருடன் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் ஆலியா பட் பத்ருனிசா ஷேக் என்னும் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் ஆலியாபட் தனது கணவரை வீட்டுக்குள் ஒளியவைத்து அடித்து துன்புறுத்துவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆலியாவின் பாத்திரம் தன் கணவனை எண்ணெய் சட்டியால் அடிப்பது, முகத்தில் தண்ணீரை ஊற்றுவது, முகத்தை தண்ணீரில் மூழ்க வைப்பது என ட்ரெய்லர் முழுவதும் அவரை அடித்துக்கொண்டே இருக்கிறார்.
BoycottAliaBhatt
அவரைக் கொல்வதற்குப் பதிலாக, அவர் ஆலியாவை நடத்தியது போலவே அவரையும் நடத்தத் திட்டமிடுவதையும் சித்தரிக்கிறது. அவரை எப்போதும் நாற்காலியில் கட்டி வைத்து அடிக்கும்படியான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
#BoycottAliaBhatt who is endorsing DV on Men.
— Catachi (@itachi_senpai1) August 3, 2022
Imagine if the genders were reversed! pic.twitter.com/OK4EDAe3pS
இதுபோன்ற காட்சிகள் ஆண்களுக்கு எதிராக வீட்டிற்குள் நடத்தப்படும் வன்முறையை ஆதரிக்கும் விதமாக உள்ளது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த ஹாஷ்டாக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. பலர் ஆலியா பட்டிற்கு எதிராகவும், இந்த படத்தை புறக்கணிக்கவும் கூறி வருகிறார்கள்.