5 வயது சிறுவன்..கூட்டு பாலியல் வன்கொடுமை - காப்பாற்றாமல் வீடியோ எடுத்த கொடூரம்!
5 வயது சிறுவனுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில் சிறுவன் வசித்து வந்த வீட்டின் அருகே உள்ள பண்ணையில் வைத்து அவ்வூரை சேர்ந்த இருவர் சிறுவனை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அப்போது அந்த வழியாக ஆடு மேய்த்துக்கொண்டு இருந்த இருவர் சிறுவனுக்கு நடக்கும் கொடுமைகளை தடுக்காமல் நின்று மனசாட்சியில்லாமல் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு சிறுவனின் உடல் நிலை திடீரென மோசமானதைத் தொடர்ந்து அவனின் உடலில் உள்ள காயங்களை வைத்து பெற்றோர் உண்மையைக் கண்டறிந்துள்ளனர்.
சிறுவன்..
இதுதொடர்பாக தவறு செய்த இருவரின் வீட்டுக்கு சென்று பெற்றோர் நியாயம் கேட்டுள்ளனர். அதற்கு சிறுவனின் பெற்றோரை அவர்கள் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இந்த நிலையில், சிறுவனின் பெற்றோர் இது குறித்து போலீசரிடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து குற்றவாளிகள் இருவரும் தப்பியோடிய நிலையில் அவர்களை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைத்துள்ளது.