சிறுவனிடம் விளையாடிய மீன்... - நெட்டிசன்களை ஆச்சரியப்படுத்திய வீடியோ...!
சிறுவன் ஒருவனிடம் மீன் ஒன்று விளையாடிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சிறுவனிடம் விளையாடிய மீன் -
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பெரிய மீன் தொட்டிக்கு அருகே சிறுவன் ஒருவன் சென்று ஒரு மீனை உற்று நோக்கினான். அந்த மீனும் அச்சிறுவன் அருகில் வந்தது.
உடனே, அந்த சிறுவன் மீன்தொட்டியை சுற்றி ஓட ஆரம்பித்தான். அந்த மீனும் அச்சிறுவனுடன் மீன்தொட்டிக்குள் சுற்றி ஓடியது. இதனால், மகிழ்ந்து போன சிறுவன் மீண்டும், மீண்டும் ஓட ஆரம்பித்தான் அந்த மீனும் சிறுவன் கூடவே ஓட ஆரம்பித்தது.
பின்னர், அச்சிறுவன் ஓடாமல் நின்றான். அந்த மீனும் ஓடாமல் நின்றது. மீண்டும் ஓடும்போது, அந்த மீனும் ஓட ஆரம்பித்தது.
இச்சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே ஆச்சரியமடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Boy vs. fish race pic.twitter.com/2hkNd7PETJ
— Tech Burrito (@TechAmazing) January 3, 2023