ஆக்சிஜன் மாஸ்க் இல்லாமல் டீ கப் பயன்படுத்திய அரசு மருத்துவமனை - மருத்துவர்கள் விளக்கம்!

Tamil nadu Kanchipuram
By Vinothini Aug 02, 2023 04:26 AM GMT
Report

 அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்க் இல்லாததால் டீ கப் பயன்படுத்திய சம்பவம் வைரலாகி வருகிறது.

மூச்சு திணறல்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அரசு பள்ளியில் படிக்கும் ஒரு மாணவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதனால் மாணவனை அழைத்துக் கொண்டு அவரது தந்தை அரசு மருத்துவமனைக்கு வந்தார்.

boy-treated-using-tea-cup-in-govt-hospital

அப்பொழுது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூச்சு குழாய் வழியாக ஆக்சிஜன் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். அப்பொழுது அவர்கள் ஆக்சிஜன் மாஸ்க்குக்கு பதிலாக டீ கப்பை பயன்படுத்தியுள்ளனர்.

மருத்துவர் விளக்கம்

இந்நிலையில், இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த ஒருவர் இதனை வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

boy-treated-using-tea-cup-in-govt-hospital

அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கலைச்செல்வியிடம் கேட்டபோது கொரோனா காலகட்டத்தில் பாதுகாப்பு கருதி இந்த வழிமுறைகளை பின்பற்றியதாகவும். மாணவர் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று அவர்கள் பெற்றோர்கள் கேட்டுக் கொண்டதனால் அவசரமாக அதுபோன்ற சிகிச்சை அளித்ததாகவும் கூறியுள்ளார்.