மனைவியை கிண்டல் அடித்த சிறுவன் - தட்டிக்கேட்ட கணவனுக்கு நடந்த கொடூரம்!
மனைவியை கிண்டல் செய்த சிறுவனை தட்டிகேட்ட கணவன் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மனைவியிடம் தகராறு
கடலூர், மணலூர் காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(33). செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு சித்ரா(30) என்ற மனைவியும், 12 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
அதேபகுதியில் கடைக்கு பொருட்கள் வாங்க சென்று கொண்டிருந்தார். அப்போது 17 வயதுடைய சிறுவன் ஒருவன் கஞ்சா போதையில் கிண்டல் செய்துள்ளான். உடனே இதுகுறித்து, சித்ரா கணவனிடம் கூறியுள்ளார்.
கணவன் கொலை
அதனையடுத்து, சிறுவனை சந்தித்து தட்டிக்கேட்டு கத்தியால் கழுத்தை கீறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் போதையில் கத்தி எடுத்து வந்து விஜயின் கழுத்தில் குத்தியுள்ளான்.
அதில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததில் அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்துள்ளனர்.