ஓடும் ரயில் முன் ரீல்ஸ் எடுக்க முயன்ற சிறுவன் - நேர்ந்த கதியால் அதிர்ச்சி!
ஓடும் ரயில் முன் ரீல்ஸ் எடுக்க முயன்ற சிறுவன் உயிரிழந்தார்.
ரீல்ஸ் மோகம்
ஒடிசா, மங்களாகாட் பகுதியை சேர்ந்த சிறுவன் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் லைக்ஸ்களை பெறுவதற்காக பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், தனது தாயுடன் தட்சினகாளி கோவிலுக்கு தரிசனத்துக்காக சென்றார். அப்போது அந்த கோவில் அருகே ஜனகேதெய்ப்பூர்வ ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ஸ்டேஷன் அருகே இரும்பு மேம்பாலத்தில் ரயில் செல்லும்.
சிறுவன் பலி
இதனால் அதன் மீது ஏறி ரயில் வரும்போது ரீல்ஸ் எடுக்க சிறுவன் முடிவு செய்து மேம்பாலத்தில் நின்றார். சிறுவனை பார்த்தவுடன் ரயில் இன்ஜின் டிரைவர் ‛ஹாரன்' அடித்தார். ஆனால் சிறுவன் ரயில் தண்டவாளத்தை ஒட்டியே நின்று கையில் செல்போன் வைத்து கொண்டு ரயில் முன்பு ரீல்ஸ் செய்தார்.
அப்போது பின்னால் வேகமாக வந்த ரயில் சிறுவன் மீது மோதியது. இதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது சிறுவன் ரீல்ஸ் எடுக்க முயன்றதும், அப்போது ரயில் அவன் மீது மோதியது தொடர்பான வீடியோ வெளியாகி பதற வைத்துள்ளது.