இறந்த பாம்பினை வைத்து ஸ்கிப்பிங் ஆடும் இளைஞன் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

video goes viral young boy plays skipping using dead snake faces backlash
By Swetha Subash Dec 19, 2021 12:27 PM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

இறந்து போன பாம்பை வைத்து வாலிபர் ஒருவர் ஸ்கிப்பிங் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வன விலங்குகள் மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் நுழைந்து சேட்டை செய்வதும் அட்டாகசம் செய்வதும் வழக்கமாக  நடப்பது தான்.

அதே வேளையில் மக்களும் வன விலங்குகளை அவ்வப்போது கொடூரமாக தாக்குவதும், அதனை கொடுமைப்படுத்தும் நிகழ்வுகளும் சமூக வலைதளங்கள் வாயிலாக வெளிச்சத்திற்கு வருகிறது.

அந்த வகையில், சுமார் 6 அடி நீளமுள்ள இறந்த பாம்பை இளைஞர் ஒருவர் தனது இரு கையால் பிடித்து ஸ்கிப்பிங் விளையாடிக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதனைக் கண்ட விலங்குகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், நெட்டிசன்கள் என பலரும் இளைஞரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தும்,

வாயில்லா ஜீவனை வைத்து விளையாடியதற்காக சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என கொதித்துப்போய் பேசி வருகின்றனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கிராமப் பகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது எனவும் கூறப்படுகிறது.