சாஸ் பாட்டிலை வாயில் வைத்த சிறுவன் - 4 கோடி இழப்பீடு கேட்ட ஹோட்டல்!
சாஸ் பாட்டிலை சுவைத்த சிறுவனிடம் உணவகம் ரூ.4 கோடி இழப்பீடு கேட்டுள்ளது.
பிரபல உணவகம்
அகின்டோ சுஷிரோ என்ற உணவகத்தை ஃபுட் அன்ட் லைஃப் நிறுவன குழுமம் நடத்தி வருகிறது. இங்கு வாடிக்கையாளர்களுக்கு உணவு வகைகள் கன்வேயர் பெல்ட் மீது வைக்கப்பட்டு, மோட்டார் மூலம் இயக்கப்பட்டு அவர்களின் மேஜைக்கு அனுப்பப்படுகிறது.

அங்கு உணவகத்திற்கு வந்த ஜப்பானைச் சேர்ந்த சுஷி சங்கிலி என்பவர் உணவுகள் செல்லும் போது அதில் இருக்கும் போத்தல்கள், தட்டுகள், உணவுகளை எடுத்து சுவைத்துப் பார்த்துள்ளார்.
4 கோடி இழப்பீடு
அதுகுறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. அதைத்தொடர்ந்து உணவகம் அதன் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டது. தொடர்ந்து, உணவகத்தின் பங்குகள் சரிந்ததால் அது மேலும் அதன் வர்த்தகத்தை பாதித்தது.
அதனையடுத்து அந்த நபர் மீது போலீஸாரிடம் புகாரளிக்கப்பட்டது. மேலும், அவரிடம் உணவகம் 645,000 வெள்ளி இழப்பீடு (4 கோடி) கேட்டுள்ளது.