சசிகலாவுக்கு முருகன் படத்தை பரிசளித்த 14 வயது சிறுவன்
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு சென்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி திருமதி சசிகலா நடராஜன் ஸ்வாமி தரிசனம் செய்தார். நான்காண்டுகள் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று வந்த சசிகலா தான் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு கோயிலுக்கு சென்று ஸ்வாமி தரிசனம் செய்து வந்த நிலையில், தற்போது மதுரையில் உள்ள முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான சுப்பிரமணியசாமி கோவிலுக்கு வந்து ஸ்வாமி தரிசனம் செய்தார். அப்போது உசிலம்பட்டி தொகுதி வேட்பாளர் மகேந்திரன், திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை, திருமங்கலம் தொகுதி வேட்பாளர் ஆதி நாராயணன், ஆகியோர் திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் சசிகலாவிற்கு மாலையுடன் வரவேற்பளித்தனர்.
தொடர்ந்து ஜவஹர் ரத்தினம் எனும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுவன் சசிகலாவிற்கு திருப்பரங்குன்றம் முருகன் படம் ஒன்றைப் பரிசளித்தார்.