காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக காதலன் செய்த செயலைப் பாருங்க... - அப்படியே அசந்துடுவீங்க...!
காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக காதலன் செய்த சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காதலன்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், கால்பந்து மைதானத்தில் திடீரென ஒரு நபர் ஓடுகிறார். இவர் ஓடி வருவதைப் பார்த்த கால்பந்து மைதானத்தில் இருந்த பாதுகாவலர்கள் இவரை தடுக்க ஓடி வரும்போது, அந்த நபர் தடுமாறி கீழே விழுகிறார். உடனே பாதுகாவலர்கள் அருகே வந்து இவரை எழுப்ப முயற்சி செய்கின்றனர். ஆனால், இவரால் எழுந்திருக்க முடியவில்லை.
பிறகு 4, 5 நபர்கள் ஓடி வந்து இவருக்கு முதலுதவி செய்ய முற்படுகின்றனர். பயந்துக்கொண்டே ஓடி வந்த பெண் இவர் அருகில் சென்று கத்தியதும், உடனே எழுந்த அந்த நபர், அப்பெண்ணுக்கு சர்ப்ரைஸாக மோதிரத்தை காட்டி காதலை வெளிப்படுத்துகிறார்.
இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரித்து கைத்தட்டினர். மைதானத்தில் கால்பந்து போட்டியை பார்க்க வந்த ரசிகர்கள் இச்சம்பவத்தை பார்த்து ஆரவாரம் செய்து கைதட்டினர். அப்பெண் காதலனின் காதலை ஏற்று கட்டியணைத்து முத்தமிட்டாள்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அப்பா... என்ன ஒரு சர்ப்ரைஸ்... ரொம்ப பயந்துபோய்டோம்... என்று வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
He faked the injury to propose to his girlfriend ??
— ESPN FC (@ESPNFC) January 2, 2023
(via Klaudhajdari/TT) pic.twitter.com/h1xyNcmIKN