கலைஞர் வேடமணிந்து திமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்த சிறுவன்
திமுக வேட்பாளரான காரம்பாக்கம் கணபதிக்கு சிறுவன் ஒருவர் கலைஞர் வேடமணிந்து உற்சாக வரவேற்பு அளித்துள்ளார். மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் பெஞ்சமினுக்கு எதிராக திமுக சார்பில் காரம்பாக்கம் கணபதி போட்டியிடுகிறார்.
தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் காரம்பாக்கம் கணபதிக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். நேற்று முகப்பேர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, 92 வது வார்டு இளைஞரணி அமைப்பாளர் நரேஷ் தலைமையில் இளைஞர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
இதை தொடர்ந்து அந்த பகுதியில் சிறுவர் ஒருவர் கலைஞர் வேடமணிந்து, சால்வை அணிவித்து வரவேற்றார்.
தொடர்ந்து கட்டுமான பணியாளர்களுக்க உதவும் வகையில் அவருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காரம்பாக்கம் கணபதி கூறுகையில், தற்போது அமைச்சராக பணியாற்றி வரும் பெஞ்சமின் 5 ஆண்டு காலமாக தொகுதி பக்கமே வரவில்லை, நான் செல்லும் இடமெல்லாம் இதுவே பொதுமக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.