பாம்புக்கடிக்கு மந்திரவாதியிடம் அழைத்து சென்ற பாட்டி - அவசர சிகிச்சை இல்லாமல் 4 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்!

Snake Death
By Vinothini May 05, 2023 06:44 AM GMT
Report

பாம்பு கடித்த 4 வயது சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் மந்திரவாதியிடம் அழைத்து சென்றதால் உயிரிழந்த சிறுவன்.

மேற்கு வங்காளம்

மேற்கு வங்காள, ஹூக்லியில் மாநிலத்தை சேர்ந்தவர் சுர்ஜித் பால் தாஸ் என்ற 4 வயது சிறுவன். அவன் தனது வீட்டிற்கு எதிரே உள்ள வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு குழிக்குள் கையை விட்டபொழுது பாம்பு ஒன்று அவனை கடித்தது. அந்த சமயத்தில் சிறுவனின் பெற்றோர் வீட்டில் இல்லை, அவனது பாட்டி மட்டுமே இருந்தார்.

boy-4-dies-as-grandmother-takes

அந்த பாட்டி பாம்புக்கடிக்கு சிகிச்சை அளிப்பதற்காக டாக்டரிடம் அழைத்துச் செல்வதற்கு பதிலாக உள்ளூர் மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மந்திரவாதி இல்லாததால், மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் சுச்சுரா மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு அந்த சிறுவனின் உயிர் பிரிந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

சுகாதார ஆய்வாளர் விழிப்புணர்வு

இந்நிலையில், அம்மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் "உடனடி மருத்துவ உதவி இல்லாததால் சிறுவன் உயிரிழந்தான்" என்று கூறினார்.

boy-4-dies-as-grandmother-takes

மேலும் சுகாதார துறை ஆய்வாளர், "பாம்பு கடித்தால் விரைவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும், அனைத்து வகையான தடுப்பூசிகளும் அங்கு உள்ளன. முன்னதாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தால் இந்த அசம்பாவிதத்தை தவிர்த்திருக்கலாம்" என்று கூறி கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசினார். தற்போது, பாம்புக்கடியை தவிர்க்க சுகாதாரத்துறையினர் அப்பகுதியில் பிளீச்சிங் தெளித்துள்ளதாகவும் கூறினார்.