இறந்த சிறுவன் 2 மணி நேரத்தில் உயிரோடு எழுந்த அதிசயம் - என்ன நடந்தது?
இறந்ததாக அறிவிக்கப்பட்ட சிறுவன் மீண்டும் உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவன் இறப்பு
அமெரிக்காவைச் சேர்ந்தவர் சம்மி பெர்கோ(16). இந்த சிறுவன் தனது குடியிருப்புக்கு அருகே இருந்த ஜிம்மில் ராக் கிளைம்பிங் என்ற வகையான உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். அப்போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், ஜிம் ஊழியர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு CPR சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால், மகன் இறந்துவிட்டதாக தாய் ஜெனிஃபர் பெர்கோவிடன் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுவனின் உடலின் அருகில் சென்று உட்கார்ந்து அழுது கொண்டிருந்துள்ளனர்.
அதிசயம்
இந்நிலையில் திடீரென 2 மணி நேரங்களுக்கு பிறகு சிறுவனின் உடல் அசைவதை கண்டு பெற்றோர் ஆச்சர்யமடைந்து மருத்துவர்களை அழைத்து உயிரோடு இருப்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து, அறிவியல் முறைப்படி இறந்து போனதாக அறிவிக்கப்பட்டவர்,
மீண்டும் உயிர்த்தெழுந்த அதிசயம் நிகழ்ந்துள்ளதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். பெர்கோவின் இதயத்துடிப்பை மீண்டும் கேட்டபோது, எனக்கு சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. எனது வாழ்க்கையில் நிகழ்ந்த மிகப்பெரிய உணர்வுப்பூர்வமான மகிழ்ச்சியான சம்பவம் இது என சிறுவனின் தாய் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.