மகனின் சிறுநீரகம் செயலிழப்பு - வேதனையில் தற்கொலை செய்த தாய்!
மதுரை அருகே மகனுக்கு சிறுநீரகம் செயல் இழந்த வேதனையில் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டசம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள போத்தம்பட்டி புதூரை சேர்ந்த சித்ரா, கணவர் வெளி மாநிலத்தில் பணிபுரிந்து வருவதால் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் முதல் மகன் சங்கரனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுநீரக செயல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு பல்வேறு மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளித்த நிலையில், உடல் நலம் பெறவில்லை.
இதனால் மன வேதனையில் இருந்த சித்ரா நேற்று வீட்டின் அருகே உள்ள தனது தோட்டத்திற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.