செல்போனில் விளையாடிய மகனை அடித்துக்கொன்ற தந்தை - அதிர்ச்சி சம்பவம்
டெல்லியில் செல்போனில் தொடர்ச்சியாக விளையாடிகொண்டிருந்த மகனை தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி கான்பூர் பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரியான ஆதித்ய பாண்டே என்பவருக்கு கியான் பாண்டே என்கிற உத்கர்ஷ் என்ற 5 வயது மகன் உள்ளார். மகன் படிப்பில் கவனம் செலுத்தாமல் தொடர்ச்சியாக மொபைலில் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.இது தொடர்பாக ஆதித்ய பாண்டே தனது மகனை கண்டித்தபோதும் சிறுவன் மொபைலில் விளையாடுவதை நிறுத்தவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த ஆதித்ய பாண்டே கியான்பாண்டேவை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் சிறுவன் மயக்கமடையவே உடனடியாக அவனை தூக்கிக்கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு பெற்றோர் சென்றுள்ளனர்.கியான்பாண்டேவை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் உயிரிழந்ததாக தெரிவித்தனர். மேலும் காயம் குறித்து பெற்றொரிடம் கேட்டுள்ளனர்.
அவர்கள் மழுப்பலான பதிலையே அளித்த நிலையில் சிறுவனின் உடலில் கை, கால், கழுத்து பகுதியில் தாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தெரிந்துள்ளது.இதுகுறித்து போலீசுக்கு மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்தது. விரைந்து சென்ற போலீசார், கியான் பாண்டேவை அடித்துகொன்ற ஆதித்ய பாண்டேவை கைது செய்தனர்.