பிளஸ் 1 மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவன் ; உடந்தையாக இருந்த தந்தை மற்றும் உறவினர்கள் - அதிர்ச்சி சம்பவம்!
சிறுமியை கர்ப்பபாக்கிய சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமை
திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு கிராமத்தை சேர்ந்த 18 வயது சிறுவன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பிளஸ்-1 படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.
[]
இதுகுறித்து சிறுவனின் வீட்டாருக்கு தெரியவர, சிறுவனின் தந்தை முத்துராஜ், உறவினர்கள் ருத்ரா, கல்யாண சுந்தர, தர்மதுரை ஆகியோர் சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க முயன்றுள்ளனர்.
கைது
இதற்காக சிறுமியை மருத்துவரிடம் அழைத்து சென்று கர்ப்பத்தை கலைக்க முயன்றுள்ளனர். ஆனால் மருத்துவர் கர்ப்பத்தை கலைக்க முடியாது என்று கூறியதால், இந்த விஷயம் குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக சிறுமியை, சிறுவனின் வீட்டார் மிரட்டியதாக தெரிகிறது.
இந்நிலையில் இதுகுறித்து சிறுமியின் தரப்பில் இருந்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுவனை கைது செய்துள்ளனர். மேலும், சிறுவனுக்கு உடந்தையாக இருந்து உறவினர்கள் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.