பிரபல குத்துச்சண்டை வீரர் புற்றுநோயால் மரணம்

மணிப்பூரை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் டிங்கோசிங் புற்றுநோய் காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

42 வயதான டிங்கோசிங் 1998 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றார். அதேஆண்டு அர்ஜூனா விருதையும், 2013 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் பெற்ற அவர் 2017-ம் ஆண்டு முதல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் டிங்கோசிங் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு விளையாட்டுத் துறையை சார்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்