வில் ஸ்மித் மற்றும் கிறிஸ் ராக் இடையே குத்துச்சண்டை போட்டி வைக்கலாமே ? இது நெட்ல ட்ரெண்டிங்

boxing willsmith chrisrock
By Irumporai Mar 28, 2022 10:47 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

வில் ஸ்மித் மற்றும் கிறிஸ் ராக் இடையே குத்துச்சண்டை போட்டியை ஏற்பாடு செய்ய பிரபல குத்துச்சண்டை வீரர் ஜேக் பால் முன்வந்துள்ளார். ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாகத் தொடங்கி அமெரிக்கவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,சிறந்த நடிகருக்கான ‘ஆஸ்கர் விருதை’ வில் ஸ்மித் வென்றுள்ளார்.கிங் ரிச்சர்ட் திரைப்படத்தில் நடித்ததற்காக வில் ஸ்மித்திற்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரபல ஸ்டான்ட்-அப் காமெடியனான கிறிஸ் ராக் சிறந்த விருது வழங்குவதற்காக அழைக்கப்பட்டிருந்தார்.

அப்போது அவர் பேசுகையில் வில் ஸ்மித் மனைவி ஜடா alopecia என்கிற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று பிரபல ஹாலிவுட் படமான GI Jane படத்தில் இராணுவ வீராங்கனையின் தோற்றத்தை ஒப்பிட்டு பேசினார்.

இதனால் கோபமடைந்து வில் ஸ்மித் வேகமாக சென்று கிறிஸை கன்னத்தில் அறைந்தார்.இந்த நிகழ்வு பற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு இன்றைய ட்ரெண்டிங்கில் உள்ளது.

இதனைத்தொடர்ந்து “கிறிஸ் ராக் மற்றும் வில் ஸ்மித் ஒரு குத்துச்சண்டை பார்வைக்காக க்காக பிரபல குத்துச்சண்டை வீரர் ஜேக் பால் எவ்வளவு தொகையை வழங்கப் போகிறார்?” என்று சால் வல்கானோ ட்வீட் செய்திருந்தார்.

இதற்கு பதிலளித்த ஜேக் பால் வில் ஸ்மித்துக்கு $15 மில்லியன் மற்றும் கிறிஸ் ராக்கிற்கு $15மில்லியன் கிடைத்துள்ளது. அதை ஆகஸ்ட் மாதம் அதை விளம்பரப்படுத்துவதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.