கடந்த காலத்தை விட்டுத் தள்ளுங்கள் வரலாற்றை மாத்தி எழுதுவோம் : சவால் விடும் பாக். கேப்டன் பாபர் ஆஸம்

Irumporai
in கிரிக்கெட்Report this article
இந்தியாவுக்கு எதிராகக் கடந்த கால உலகக் கோப்பைகளில் ஏற்பட்ட தோல்விகளை விட்டுத் தள்ளுங்கள், நாளை நடக்கும் ஆட்டத்தைப் பாருங்கள், வரலாறுகள், சாதனைகள் உடைக்கப்படும் என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் நம்பிக்கை தெரிவித்தார்.
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி யின் போது ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு பலம். எங்களின் பலம் பந்துவீச்சுதான்.
மேலும், நாளை நடக்கும் போட்டியில் எவ்வாறு விளையாடுகிறோம் என்பதுதான் கேள்வி. எங்களிடம் சிறந்த வீரர்கள் இருப்பதால் இந்தியாவுக்கு எதிராகச் சிறப்பாக ஆடுவோம்.
கடந்த காலத்தில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்ததைப் பற்றி நினைக்கவில்லை. வரலாற்றையும், சாதனையையும் மாற்றி எழுதலாம். இது உலகக் கோப்பை போட்டி என்பதால், எந்தப் போட்டியையும் எளிதாக எடுக்க முடியாது.
பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் என மூன்று அடிப்படையான அம்சங்களில் கவனம் செலுத்தி சிறப்பாகச் செயல்பட வேண்டும். என் பந்துவீச்சாளர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளதாக பாபர் ஆஸம் கூறியுள்ளார்.