நாங்க நல்லா பவுலிங் பண்ணல : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தோல்வி குறித்து ரோகித் சர்மா கருத்து

Australia India
By Irumporai Sep 21, 2022 02:44 AM GMT
Report

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது.

 இந்திய அணி தோல்வி

இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நேற்றிரவு அரங்கேறியது. 'டாஸ்' ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் பிஞ்ச் முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தார். அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 208 ரன்கள் குவித்தது.

நாங்க நல்லா பவுலிங் பண்ணல : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தோல்வி குறித்து ரோகித் சர்மா கருத்து | Bowlers Not Bowling Well Rohit Sharma On Australia

 அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா

அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 71 ரன்களுடனும் (30 பந்து, 7 பவுண்டரி, 5 சிக்சர்), ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து மெகா இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 211 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கேமரூன் கிரீன் 61 ரன்கள் (30 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) , மேத்யூ வேட் 45 ரன்கள் (21 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். 

 நங்க சரியா பந்துவீசவில்லை

இந்த தோல்விக்கு பின்னர் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது நாங்கள் நன்றாக பந்து வீசவில்லை என்று நினைக்கிறேன். 200 ரன்கள் என்பது ஒரு நல்ல ஸ்கோர், மேலும் களத்தில் எங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை நாங்கள் பயன்படுத்தவில்லை.

இது எங்கள் பேட்டர்களின் சிறந்த முயற்சி, ஆனால் பந்துவீச்சாளர்கள் அங்கு இல்லை. இது அதிக ரன்கள் எடுக்கக்கூடிய மைதானம் என்பது எங்களுக்குத் தெரியும். 200 ரன்கள் எடுத்தாலும் நிதானமாக இருக்க முடியாது.

நாங்க நல்லா பவுலிங் பண்ணல : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தோல்வி குறித்து ரோகித் சர்மா கருத்து | Bowlers Not Bowling Well Rohit Sharma On Australia

நாங்கள் விக்கெட்டுகளை எடுத்தோம், ஆனால் அவர்கள் நன்றாக விளையாடினார்கள். அ அவர்கள் சில அசாதாரண ஷாட்களை விளையாடினர். என கூறினார். நாங்க நல்லா பவுலிங் பண்ணல : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தோல்வி குறித்து ரோகித் சர்மா கருத்து