இந்திய பவுலரின் வேகப்பந்தில் விக்கெட்டான காதலி - கோலாகலமாக நடந்து முடிந்த திருமணம்!
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் அவரது நீண்ட நாள் காதலியை திருணம் செய்து கொண்டார்.
முகேஷ் குமார்
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் முகேஷ் குமார். இதுவரை இந்தியா அணிக்காக 3 ஒருநாள் போட்டி, 7 டி20 போட்டி, ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி மொத்தமாக 10 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடினார். மேலும், தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்று முதல் 2 போட்டிகளில் விளையாடியிருந்தார்.
திருமணம்
இதனையடுத்து தனது திருமணத்திற்காக 3வது போட்டியிலிருந்து விலகினார். இந்நிலையில் அவரது திருமணம் வெகு விமர்சையாக நடந்து முடிந்துள்ளது. முகேஷ் குமார் தனது நீண்ட நாள் காதலியான திவ்யா சிங்கை கரம் பிடித்துள்ளார்.
அவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், திருமணத்தை முடித்து விட்டு முகேஷ் குமார் இந்திய அணியுடன் இணைய இருக்கிறார். நான்காவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக களமிறங்க இருக்கிறார்.