விஜய்யின் தொண்டர்கள் விரல்களை பூட்ஸ் காலால் நசுக்கிய பவுன்சர்: வீடியோ வெளியாகி பரபரப்பு!

Vijay Tamil nadu Election TVK
By Vinoja Apr 10, 2026 11:38 AM GMT
Report

சிவகங்கை மாவட்டத்தில் போட்டியிடும் த.வெ.க., வேட்பாளர்களை ஆதரித்து காரைக்குடியில் இன்று விஜய் பிரசாரம் செய்தார்.

இதற்காக, சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு விஜய் வந்த அவர், பின்னர் அங்கிருந்து காரைக்குடிக்கு பிரசார வாகனத்தில் சென்றார்.

விஜய்யின் தொண்டர்கள் விரல்களை பூட்ஸ் காலால் நசுக்கிய பவுன்சர்: வீடியோ வெளியாகி பரபரப்பு! | Bouncer Crushes Vijays Volunteers Fingers

இந்தநிலையில், காரைக்குடி பிரசாரத்திற்காக மதுரையிலிருந்து புறப்பட்ட விஜய்யின் பிரசார வாகனத்தில் தொற்றிய தொண்டர்களின் விரல்களை, பூட்ஸ் காலால் பவுன்சர் ஒருவர் நசுக்கிய காணொளி மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரசாரத்திற்கு கர்ப்பிணிகள், சிறுவர், சிறுமியரை அழைத்து வர வேண்டாம் என்று அக்கட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும் இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் விஜயின் வாகனத்தை பின்தொடர்வதால், விபத்துக்களும் தொடர்கதையாகி வருகின்றமை குறிப்பிடுப்பிடத்தக்கது.