பாட்டில்களை வீசி இளைஞர் அட்டகாசம் - நடுரோட்டில் ஓட ஓட அடித்த பொதுமக்கள்..!
சென்னையில் நள்ளிரவில் இளைஞர் ஒருவர் டீ கடையில் இருந்த பாட்டில்களை நடுரோட்டில் வீசி அட்டகாசத்தில் ஈடுபட்டார்.
சென்னை சைதாப்பேட்டை காவல்நிலையம் அருகே டீ கடை ஒன்று உள்ளது.
இந்த கடையில் இரவு நேரத்தில் வேலைக்கு செல்வோர் மற்றும் இரவு நேர பணியாளர்கள்,வாகன ஓட்டிகள் அந்த கடையில் நள்ளிரவில் டீ குடிப்பது வழக்கம்.
இந்த நிலையில் வழக்கம் போல டீ கடை செயல்பட்டு கொண்டிருந்தது.
அப்போது அங்கு மது போதையில் வந்த இளைஞர் ஒருவர் கடையில் இருந்த குளிர்பான பாட்டில்களை உடைத்தும் நடுரோட்டில் வீசியும் அட்டகாசத்தில் ஈடுபட்டார்.
இதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் அந்த இளைஞர் வாகனங்கள் மீதும் பாட்டில்களை வீசி தாக்க முற்பட்டார்.
இதையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அந்த இளைஞரை தாக்க தொடங்கினர்.
பின்னர் அப்பகுதிக்கு வந்த போலீசார் அந்த இளைஞரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.