மடாதிபதிகள் உள்ளே குடியரசுத்தலைவர் வெளியே ? - வெங்கடேசன் எம்.பி விமர்சனம்

DMK BJP
By Irumporai May 26, 2023 06:30 AM GMT
Report

மடாதிபதிகள் உள்ளே குடியரசுத்தலைவர் வெளியே என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட் செய்துள்ளார்.

எதிர்கட்சிகள் புறக்கணிப்பு 

டெல்லியில் புதிதாக கட்டிடத்தை நாளை மறுநாள் (மே 28) பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். இந்த நிலையில், பிரதமர் மோடி திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குடியரசு தலைவர் தான் நாடாளுமன்ற கட்டடத்தை திறக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேலும், இந்த நிகழ்வில் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ள போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.  

மடாதிபதிகள் உள்ளே

இந்த நிலையில், இதுகுறித்து வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், இப்பொழுதிருக்கும் நாடாளுமன்ற கட்டிடத்தைத் தான் மியூசியம் ஆக்கப்போவதாக சொன்னார்கள்.

ஆனால் மியூசியத்தில் இருக்கும் பொருளை புதிய கட்டிடத்தில் கொண்டுவந்து வைக்கிறார்கள். துவக்கமே அமர்க்களம். மடாதிபதிகள் உள்ளே குடியரசுத்தலைவர் வெளியே, என பதிவிட்டுள்ளார்.