வலுக்கும் மோதல் கங்குலியை கண்டுகொள்ளாத விராட் : வைரலாகும் வீடியோ

Virat Kohli IPL 2023
By Irumporai Apr 16, 2023 09:53 AM GMT
Report

விராட் மற்றும் டெல்லி அணியின் இயக்குனர் கங்குலி ஆகியோர் கை குலுக்காமல் தவிர்த்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஐபிஎல் போட்டி

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டி முடிந்து இரு அணி வீரர்களும் துணை ஊழியர்களும் வழக்கமான கைகுலுக்கி சென்றனர்.

வலுக்கும் மோதல் கங்குலியை கண்டுகொள்ளாத விராட் : வைரலாகும் வீடியோ | Both Of Them Virat Kohli Ignores Ganguly Video

 வைரலாகும் வீடியோ

அப்போது, விராட் கோலி ஃபாஃப் டு பிளெசிஸுக்குப் பின்னால் இருந்தார், கங்குலி டெல்லி தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கிற்குப் பின்னால் இருந்தார். கங்குலி டு பிளெசிஸுடன் கைகுலுக்கினார், மேலும் கோலியை வாழ்த்த அவர் வந்தபோது, ​​கோலி அதனை மறுத்ததாக தெரிகிறது. இது தொடர்பான வீடியோக்கள். புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் கை குலுக்குவதற்கு முன்னதாக, போட்டியின் போது, டெல்லி கேபிடல்ஸ் இன்னிங்ஸின் 18-வது ஓவரில் அமன் கானின் கேட்சை எடுத்த பிறகு, டெல்லி கேபிடல்ஸ் டக் அவுட்டில் கங்குலி அமர்ந்திருந்தார். அவரை பார்த்து கோலி முறைத்தார். அந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.