உங்கள பாத்து பொறாமையா இருக்கு .. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கண் கலங்கிய கம்லஹாசன்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெற்றோர்கள் குறித்து பேசும் போது நடிகர் கமல்ஹாசன் கண்கலங்கியவாறு உள்ள ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
தமிழ் டிவி ரசிகர்களிடையே பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது நடந்து வருகின்றது. இந்த நிகழ்ச்சியினை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில் கடந்த சீசனகளை விட இந்த சீசன படுமோசமாக உள்ளதாக இணையாவாசிகள் தங்களின் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றைய முதல் எவிக்ஷனில் ராம் வெளியேற்றப்பட்ட நிலையில் , இன்று ஆயிஷா வெயேறுவார் என்று கூறப்படுகின்றது. இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள பிக்பாஸ் ப்ரோமோ வீடியோவில் போட்டியாளர்களின் அம்மா , அப்பா குறித்து பேச சொல்கின்றார்.
கண்கலங்கிய கமல்
அப்போது மைனா எழுந்து எனக்கு அம்மா அப்பா கிடையாது . இரண்டு பேருமே எனது குழைந்தங்க என கூறும் மைனா நான் அவங்களா மிஸ் செய்கின்றேன் எனக் கூறுகின்றார், இவ்வாறு சக போட்டியாளர்களான அஸிம், விஜே கதிரவன் ஆகியோர் தங்களின் பெற்றோர் குறித்து கூற.
அப்போது கமல் எல்லாரும் அம்மா அப்பா பத்தி பேசினீங்க. இந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. இதை தெளிவாக சொல்லாமலேயே நாம் அவர்களை இழந்து விடுவோம்.
அப்படியான குழந்தைதான் நான். சோ உங்கள பாத்து பொறாமையா இருக்கு எனக்கு கிடைக்காதது உங்களுக்கு கிடைச்சிருக்கு என கண் கலங்குகின்றார். இந்த வீடியோ தற்போது வெளியாகி அனைவரையும் நெகிழவைத்துள்ளது.