31,000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட எலும்புக்கூடு கண்டுபிடிப்பு - எடுத்துப் பார்த்தபோது வியந்த ஆராய்ச்சியாளர்கள்...!

By Nandhini Sep 08, 2022 06:34 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

31,000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட எலும்புக்கூட்டை அகழ்வாராய்ச்சியாளர்கள் குழு டீஸ்பூன் 11 நாட்களில் கண்டுபிடித்துள்ளனர்.

பழமை வாய்ந்த எலும்புக்கூடு கண்டுபிடிப்பு 

தெற்கு ஆசியாவில் உள்ள போர்னியோ என்ற தீவில் 31 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த எலும்பு கூட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அங்கு இருக்கும் லியோன் டேபா என்ற குகையில் 40 ஆயிரம் வருடம் பழமையான ஓவியங்களும் கூட கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த எலும்பு கூடு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தை சுற்றி பல பறவை எச்சங்கள், மற்ற விலங்குகளின் எலும்பு கூடுகள் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. அதோடு பல அரியவகை பூச்சிகளும் கூட கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்த்ததை விட இந்த எலும்பு கூட மிக சிறப்பாக பதப்படுத்தப்பட்டிருந்தது. இந்த எலும்பு கூட்டில் இடது கால், வலது கால் பாதம் நீக்கப்பட்டிருந்தது.

Borneo - skeleton

வியந்து போன ஆராய்ச்சியாளர்கள் 

இது வெட்டப்படாமல் சுத்தமாக நீக்கப்பட்டிருந்தது. ஒரு நபருக்கு மருந்து கொடுத்து, காலை முறையாக திட்டமிட்டு நீக்கினால் எப்படி மற்ற எலும்புகள் பாதிக்காமல் நீக்கப்படுமோ அப்படி நீக்கப்பட்டிருந்தது ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

31 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மெடிக்கல் முறைப்படி இந்த எலும்பு நீக்கப்பட்டுள்ளது. ஆபரேஷன் செய்யப்பட்ட பின்பும் அவர் உயிரோடு இருந்திருக்கிறார்.

அந்த ஆபரேஷன் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 31 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்களுக்கு ஆபரேஷன் செய்யப்பட்ட சம்பவம் ஆராய்ச்சியாளர்கள் இடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.