தமிழ் புத்தாண்டு பிறந்தது - கோவில்களில் சிறப்பு வழிபாடு

Born கோவில் TamilNewYear தமிழ்புத்தாண்டு
By Thahir Apr 14, 2022 02:17 AM GMT
Report

சித்திரை 1-ம் தேதி தமிழ் புத்தாண்டாக,சித்திரை திருநாளாக தமிழர்கள் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சித்திரை முதல் நாளான இன்று “பிலவ” ஆண்டு விடைபெற்று “சுப கிருது” புத்தாண்டு பிறந்துள்ளது.

தமிழ் புத்தாண்டு பிறப்பை அடுத்து கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து பொதுமக்கள் அதிகாலை முதலே கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.

தமிழர்களுக்கு வசந்தகாலம் என்பது கிடையாது. இளவேனிற்காலம்தான் வசந்தகாலத்தின் தொடக்கமாக உள்ளது.

இந்த இளவேனிற்காலத்தின் தொடக்கம் சித்திரை மாதமாகும். சித்திரை தொடங்கி வைகாசி வரையான இளவேனிற் காலத்தின் தொடக்க நாளை (சித்திரை 1) பல்வேறு வகைகளில் நாம் வரவேற்கிறோம்.

நேயர்கள் அனைவருக்கும் ஐபிசி தமிழ்நாடு சார்பாக தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.